ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராகுல் வழியில் அண்ணாமலை.. தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை.. 2024க்கு ஸ்கெட்சு போடும் பாஜக..

ராகுல் வழியில் அண்ணாமலை.. தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை.. 2024க்கு ஸ்கெட்சு போடும் பாஜக..

அண்ணாமலை

அண்ணாமலை

என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை உட்பட அனைத்து சொத்து விவரங்களையும் வெளியிடுவேன் - அண்ணாமலை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

விரைவில் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்தப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கு அவர் பதிலளித்தார்.

இதனிடையே, வெறும் 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தனது சொத்து எனக் கூறும் அண்ணாமலை, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை, வாங்கியது எப்படி என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் கடிகாரம் வாங்கிய ரசீதை அண்ணாமலையால் வெளியிட முடியுமா? எனவும் அவர் கேட்டிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த அண்ணாமலை, "திமுகவினருடன் ஊழல் குறித்து விவாதிக்க, நான் தயார். நான் பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் ரஃபேல் கடிகாரத்தை வாங்கினேன்.

அதன் ரசீது மற்றும் என் வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள் சமர்ப்பிக்கிறேன். ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன்” என தெரிவித்தார்.

மேலும் “தமிழ்நாடு முழுவதும் நான் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன். அந்த பாதயாத்திரையின் முதல் நாளில் அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, “இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் வெளியிட தயாரா?” என கேள்வி எழுப்பினார்.

First published:

Tags: Annamalai, BJP, Rafale jets