• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மக்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தி- பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை

மக்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தி- பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை

மோடி, அண்ணாமலை

மோடி, அண்ணாமலை

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 120 ரூபாயை எட்டியது. டீசல் விலையும் 100 ரூபாயைக் கடந்து தொடர்ந்து அதிகரித்துவந்தது. இந்தநிலையில், பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெட்ரோல், டீசல் விலை உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போகிற காரணத்தினால் தினசரி விலை கூடிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட தி.மு.க ஆட்சி பெட்ரோல், டீசலுக்கு ஐந்து ரூபாய் குறைப்போம் என்று சொல்லிவிட்டு பெட்ரோலுக்கு மட்டும் 5 ரூபாய் குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவில்லை. மேலும் பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் மேலும் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. மக்களுக்கு நல்ல பயன் கிடைக்கும் என்று நாம் தி.மு.க அரசுக்கு வேண்டுகோள் வைத்தோம். அதற்கும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே, பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருந்தது.

    பெட்ரோல், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 24 ரூபாய் வரை தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதில், வரி வருவாயை குறைத்துக் கொண்டு மக்களுக்கான சுமையை குறைக்க வாய்ப்பிருந்தும் தி.மு.க அதை செய்ய மறுக்கிறது.

    இந்தநிலையில், பிரதமர் மோடி பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரியைக் குறைத்து அறிவித்திருப்பது மக்களுக்கு கிடைத்திட்ட இனிப்பான தீபாவளி செய்தியாகும். மக்களுடைய சுமையை குறைத்து அவர்களுடைய மனதில் நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களது கஷ்டத்தை குறைத்திட பெட்ரோல், டீசலில் கலால் வரியை குறைத்த பிரதமர் மோடிக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: