Home /News /tamil-nadu /

'தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை கொண்டு வருவது எனது நோக்கம்' - பாஜக தலைவர் அண்ணாமலை

'தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியை கொண்டு வருவது எனது நோக்கம்' - பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை

BJP leader Annamalai : " அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது குருமார்கள், தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி வரவேண்டும் எனக் கூறுகிறார்கள்" - பாஜக தலைவர் அண்ணாமலை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chengalpattu, India
    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது குருமார்கள், தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி வரவேண்டும் எனக் கூறுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் சிவனடியார் சிவதாமோதரனை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார். பின்னர், சிவனடியார்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகையில், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வேண்டும் என்பதற்காகத்தான் நமது குருமார்கள், தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி வரவேண்டும் எனக் கூறுகிறார்கள்.

    ஆன்மீக ஆட்சி என்பது திருக்கோயில்களுக்கு நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது ஆன்மீக ஆட்சியில் ஒரு பங்கு அவ்வளவுதான், ஆன்மீக ஆட்சி என்பது மக்களுக்கான சிந்தனை, சமுதாயத்தின் மீது ஒரு எண்ணம், மக்களின் மீது ஒரு காதல். ஜாதி, மதத்தையெல்லாம் தாண்டி மனிதனை, மனிதனாக பார்ப்பது. அதைவிட மிக, மிக முக்கியமானது இருப்பவன், தன்னிடமிருப்பதை சுவிஸ் வங்கியிலோ, வங்கி கணக்கிலோ பூட்டி வைப்பதற்கு கிடையாது தனக்கு எவ்வளவு தேவையோ, அதைத்தாண்டி இருப்பவையை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது ஆன்மீக ஆட்சி.

    ALSO READ | " ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய அதிமுக சட்டம் இயற்றினாலும், திமுக அரசு அதனை தடுக்க தவறிவிட்டது" - எடப்பாடி பழனிசாமி 

    அப்படிப்பட்ட ஆன்மீக ஆட்சிக்குத் தான் நான் சார்ந்த கட்சி இங்கே போராடி கொண்டிருக்கின்றோம். அதே போன்று நான் சார்ந்திருக்கும் கட்சியில் அப்படிப்பட்ட ஒரு தலைவர் வேண்டும் என்றால் ஆன்மீக பாதையிலே முற்றும் துறந்த தலைவர் வேண்டும். முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சியாக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்துகிறேன்.

    பாஜக தலைவர் அண்ணாமலை


    ஆசை , காமம் , க்ரோதம் , பகை எதுவும் இல்லாமல் சமநிலையில் அரசியல் செய்யக்கூடிய ஒருவர் அரசியல் செய்ய வரும் போது ராம ராஜ்ஜியம் நடக்கும். ஆன்மீக ஆட்சி நடக்கும், இதற்கு முன்னர் இதுவும் நடந்துள்ளது. அதற்காக நாம் அனைவரும் போராட வேண்டும்.” என்று பேசினார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Annamalai, BJP

    அடுத்த செய்தி