கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஓபி ரவீந்திரநாத், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
கோவையில் உள்ள ஈஷா மையத்திலும் மகா சிவராத்திரியை கொண்டாடும் விதமாக ஈசனுடன் ஓர் இரவு என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சத்குரு வரவேற்றார். பின்னர் அவர் ஈஷா மையத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு உடன் அழைத்து சென்று அவ்விடங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர், முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார்" என குறிப்பிட்டு பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி துணை முதலமைச்சர் நமச்சிவாயம், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் திரை பிரபலங்கள் கங்கனா, தமன்னா, ஜூஹி சாவ்லா ஆகியோரும் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Annamalai, Isha yoga centre, Maha Shivaratri