• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இப்படி ஒருவரை அமைச்சரவையில் வைத்துள்ளீர்களே: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்!

இப்படி ஒருவரை அமைச்சரவையில் வைத்துள்ளீர்களே: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்!

அண்ணாமலை

அண்ணாமலை

நிதித் துறையில் அமைச்சராக இருந்தும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பங்கு பெறாமல், அதன் மதிப்பைப் பழித்தும் பேசுவதை, அரசியல் எதிர்ப்பாக இல்லை அரசியல் சாசன எதிர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

  • Share this:
    பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்துகொள்ளாத தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் செய்கை மக்களை வஞ்சிக்கும் செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், “ மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர், GST கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி.

    கொரோனா நோய் தொற்றால் இணைய வழியில் நடைபெற்ற GST கவுன்சில் கூட்டம், சுமார் 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தின் பிரச்சனைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை என்பது மக்களை மதிக்காத எதேச்சதிகாரம் என்பது பாஜகவின் கருத்து மட்டுமல்ல, தமிழக மக்களின் நிலைப்பாடும் அதுவே” என்று குறிப்பிட்டுள்ளார்.

    நிதி அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது, தான் கலந்து கொள்ள இயலாத காரணத்தைச் சொன்ன போது தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்ததும் என்றும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் என்றும் கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை,  இதிலிருந்து தமிழக அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது என விமர்சித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்: நிலைமை மாறியதால் நிலைப்பாடு மாறியது; கொள்கை மாறவில்லை.. பிடிஆர் விளக்கம்


    மேலும்,  “செப்டம்பர் 2ஆம் தேதியே லக்னோவில் நடைபெறும் GST கவுன்சில் கூட்டத்தின் அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்துவிட்டது, ஆனால் போதிய அவகாசம் இல்லை என்கிறார் நிதி அமைச்சர் PTR.தியாகராஜன். லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்கிறார், பின்னர் தந்த விளக்கத்தில் சிறிய ரக விமானங்களில் நான் செல்ல மாட்டேன் என்கிறார்.
    பயணிக்க ஒன்றரை நாட்களாகும் மூன்று விமானங்கள் மாற வேண்டும் என்று தன் கூற்றுக்கு தன்னிலை விளக்கம் வேறு தருகிறார். வெறும் மூன்று மணி நேரப் பயணத்தில் நேரடி விமானம் இருந்தும், தவறான தகவல்களை, அவர் சட்டமன்றத்தில் சொல்வது போலச் சொல்கிறார்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

    மேலும், “அமைச்சரின் செயல்,  ’பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
    எல்லாரும் எள்ளப் படும்’ என்ற திருக்குறள் இவருக்காகவே அமைந்தது போலும் என்று கூறியுள்ள அண்ணாமலை, மதிப்புக்குரிய சாலமன் பாப்பையா அவர்கள் விளக்கத்தில் சொன்னால்  ‘பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லும் அமைச்சன் எல்லாராலும் இகழப்படுவான்’.

    மேலும் படிங்க: பள்ளியில் படிக்கும்போதே பென்ஸ் காரை பயன்படுத்தியுள்ளேன்: வீரமணி


    தற்போது நடைற்ற 45ஆவது கூட்டத்திற்கு முந்தைய ஐந்து கூட்டங்கள் கொரோனா பேரிடர் காரணமாக இணைய வழியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி இணையவழியில் நடைபெறாமல், நேரடிப் பங்களிப்பில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.

    ஆகவே, இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த நிதித் துறையில் அமைச்சராக இருந்தும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் தமிழக நலனுக்காக பங்கு பெறாமல், அதன் மதிப்பைப் பழித்தும் பேசுவதை, அரசியல் எதிர்ப்பாக இல்லை அரசியல் சாசன எதிர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும்” என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    43 மற்றும் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்ட தமிழக நிதி அமைச்சர் அப்போதும் கோவா அமைச்சருடன் சர்ச்சையில் ஈடுபட்டது பேசு பொருளானது என்றும்  இப்படி ஒரு அமைச்சரை தங்கள் அமைச்சரவையில் வைத்திருக்கும் உங்களுக்காகவே அடுத்த குறளும் அமைந்தது போலும் என்றும் கூறியுள்ள அண்ணாமலை,  “

    ‘பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்’

    தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார், என்கிறார் வள்ளுவர்.
    பெட்ரோலிய பொருட்களில் உள்ள பல கட்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி GST பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிக்கட்சித் தலைவராக தாங்கள் உரத்த குரலில் பேசியது மக்களால் வரவேற்கப்பட்டது, ஆனால் ஆட்சியில் வந்து அமர்ந்த பின்னர் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறக் காரணம் சொல்ல வேண்டிய தாங்களும், தங்கள் நிதி அமைச்சரும் பாராமுகமாக நடப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்” என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: