• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முக்கிய தகவலை காணவில்லை: ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை குறித்து அண்ணாமலை விமர்சனம்!

முக்கிய தகவலை காணவில்லை: ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை குறித்து அண்ணாமலை விமர்சனம்!

நீட்

நீட்

நீட் ரத்து சட்டம் இயற்றுவது மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும் என்று ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.

  • Share this:
    நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், முக்கிய தகவல்கள் இல்லை என்று  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

    நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஆய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. இந்த குழு நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள்,பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலதரப்பட்ட மக்களிடமும் கருத்துக்களை கேட்டது. அதன் அடிப்படையி, 165 பக்க அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் கடந்த ஜூலை 14-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர்.

    ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த இந்த அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும்” என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நீட் பயிற்சி சந்தையின் மதிப்பு ரூ.5750 கோடி; தமிழ் வழி மாணவர்கள் பாதிப்பு: ஏ.கே.ராஜன் குழு கூறுவது என்ன?


    இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையில் முக்கிய தகவல் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக அரசில் அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், 2010 முதல் 2014ம் ஆண்டுவரை அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்களின் விவரங்கள் இடம் பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: