• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது; முஹம்மது நபி பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது: அண்ணாமலை

பாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது; முஹம்மது நபி பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது: அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

முஹம்மது நபி குறித்து யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது என்று பா.ஜ.கவின் தமிழக துணைத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கல்யாணராமன், நபிகள் நாயகம் பற்றி இழிவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் கண்டித்தும் கல்யாண ராமனை கைது செய்யக் கோரியும் சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டம் கோபி பேருந்து நிலையத்தில் கல்யாணராமனைக் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களைப் போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்யாணராமனைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    இந்தநிலையில், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் உள்ளிட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அவிநாசி கிளைச்சிறையில் அடைத்தனர். கல்யாண ராமன் மீது 147, 148, 504, 506(2), 153(பி), 269 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்த பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில், ‘பா.ஜ.க தேசியமும் ஆன்மீகமும் கொள்கை என்று கொண்டுள்ளது. பாஜக என்றும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது.மாற்று மதத்தினரின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்துகின்ற கட்சி பாஜக கிடையாது. முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி யார் தவறாக பேசியிருந்தாலும் அது கண்டிக்கதக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    அதேபோல, கல்யாணராமன் கைது செய்யப்பட்டதற்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கத்தக்க விதத்தில் விமர்சித்த இந்துவிரோதி வைரமுத்துவை கைது செய்யாத காவல்துறை கல்யாணராமனை கைது செய்துள்ளது பாரபட்சமானது. கண்டிக்கத் தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: