பாஜக அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தை தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலத்தில் நள்ளிரவு 1 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாம்பலம் போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கருக்கா வினோத் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்துள்ளனர். நீட் தேர்வு தொடர்பான பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். “தடயங்கள் சேகரிக்கவும், FIR பதிவு செய்வதற்கு முன்பாகவும் இடத்தை காவல்துறை சுத்தம் செய்வது எதனால்? மாநில காவல் துறையால் என்னுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பாஜக தேர்தல் அலுவலகம் மற்றும் பாஜகவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஆணையம் விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.