• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கழிவறையை சுத்தம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை

கழிவறையை சுத்தம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை

கழிவறையை சுத்தம் செய்த அண்ணாமலை

கழிவறையை சுத்தம் செய்த அண்ணாமலை

நாட்டின் பல இடங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

  • Share this:
தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள  கழிவறையை  துடைப்பம் கொண்டு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை  சுத்தம் செய்தார்.

2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை ஒட்டி  தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று கூறி, அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக, தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் இயக்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர், இந்தியா தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தி அடிகளின் கனவு நனவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். புது டெல்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்தை தூய்மைப்படுத்துவதை பிரதமர் மோடி தானே முன்னின்று நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியும் தூய்மை இந்தியா இயக்கத்தை தனது பேச்சின் மூலமும், நடவடிக்கைகளின் மூலமும் மக்களிடையே பரப்பி வருகிறார். வாரணாசியில் அவரே தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார். வாரணாசியில் உள்ள அசிகாட் என்னுமிடத்தில் அவரே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை தூய்மையாக்கினார். இதில், அங்குள்ள மக்கள் பலரும் பங்கேற்றனர்.

சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அப்போது எடுத்துக் கூறியதோடு, சுகாதாரம் இல்லாமல் போனால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்றும், அவர்களை தங்களது இல்லங்களில் கழிப்பறைகளை அமைப்பது அவசியம் என்றும் கூறினார். சமுதாயத்தின் பல பிரிவினரும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்த இயக்கத்திற்கு அரசு அலுவலர்கள் முதல் போர்வீரர்கள் வரை, திரைப்பட நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை, தொழிலதிபர்கள் முதல் ஆன்மிகத் தலைவர்கள் வரை அனைவருமே ஆதரவு அளித்துள்ளனர். மத்திய அரசின் பல துறைகள் மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கு அரசு சாரா அமைப்புகளும் உள்ளூர் சமுதாய மையங்களும் இணைந்துள்ளன. நாட்டின் பல இடங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Must Read : “இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது”... மீண்டும் அதிமுகவில் நுழையும் சசிகலா

அந்த வகையில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை துடைப்பம் கொண்டு அவரே சுத்தம் செய்தார். தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கழிவறையை சுத்தம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை அவரே சுத்தம் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: