Home /News /tamil-nadu /

தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்காததற்கு மாநில அரசுதான் காரணம்- அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்காததற்கு மாநில அரசுதான் காரணம்- அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை

அண்ணாமலை

ஆடத் தெரியதவனுக்கு மேடை கோணல் என்பது போல் தமிழக அரசு மத்திய அரசின் மீது குறை செல்கிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்குபெறாததற்கு தமிழக அரசே காரணம் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை என்பது தி.மு.கவின் இந்த மாதத்திற்கான கோட்டா. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க தயாராக உள்ளது. எப்போது வந்தாலும் எதிர்கொள்வோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தவுடன் பா.ஜ.க குழு கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தும். கட்டாய மதமாறச் சொல்லி மாணவியை கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகிகள் அனைவரின் மீதும் சட்டப்படி நடவடிக்க எடுக்க வேண்டும்.

    இதற்காக பா.ஜ.க இளைஞர் அணி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தும். மதமாற்றத்திற்காக நமிழகத்தில் லாவண்யா மரணம் கடைசியாக இருக்க வேண்டும். தமிழக சுதந்திர போராட்டத் தலைவர்களை அலங்கார ஊர்திகள் மூலம் தமிழக அரசு தமிழகம் முழுவதும் கொண்டு செல்வது வரவேற்தக்கது். தமிழக பாடநூல்களில் பாரதியார் குறித்து இருட்டடிப்பு செய்துள்ளனர்.

    சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட சின்மயி, லீனா மணிமேகலைக்கு உயர் நீதிமன்றம் தடை



    இந்தாண்டு குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்தி பங்குபெறாதற்கு காரணம் மாநில அரசே காரணம். ஆடத் தெரியதவனுக்கு மேடை கோணல் என்பது போல் தமிழக அரசு மத்திய அரசின் மீது குறை செல்கிறது’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Annamalai, Republic day

    அடுத்த செய்தி