அரசியல் லாபத்திற்காக மு.க.ஸ்டாலின் மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார் - எல்.முருகன்

அரசியல் லாபத்திற்காக மு.க.ஸ்டாலின் மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார் - எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

அரசியல் லாபத்திற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை கொண்டாடுவது தொடர்பாக சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்,
வருகின்ற 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதும் மரம் நடும் விழாக்கள், அன்னதானம், கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக சேவை வாரமாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.



Also read... நீட் விவகாரம் - முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் காரசார விவாதம்!

மேலும் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் கலந்துகொள்ளும் ஆன்மீகப் பேரணியும் நடைபெறும் எனவும் தெரிவித்த அவர்,
நீட் விவகாரத்தில் திமுக மாணவர்களை பயமுறுத்துகிறது என்றும் தற்கொலை வேதனையானதுதான். ஆனால் இதில் அரசியல் செய்வது அருவருக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் லாபத்திற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார்.
மாணவர்களின் உயிரோடு விளையாடுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நீட் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய கூடாது எனவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: