ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன்: நடிகை குஷ்பு

குஷ்பு

ஸ்டாலின் தன்னுடைய ஆட்களை அனுப்பி வீட்டில் கல்விட்டு அடித்தார்கள், சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன் என நடிகை குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டுகளை திமுக-வின் மீது வைத்துள்ளார். 

  • Share this:
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி, நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் புஷ்ப நகர் பகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க இந்த தொகுதியில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இந்த முறை இங்கு நான் வெற்றிபெற்றால் அது மக்களின் வெற்றி. பெண்களின் பயத்தை போக்க நான் சட்ட மன்றத்திற்கு செல்ல நினைக்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை அல்ல. அதிமுகவின் கோட்டை, பாஜகவின் கோட்டை, கூட்டணி கட்சிகளின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இது திமுகவின் கோட்டை என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றிருக்க மாட்டார்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், “ தி.மு.க பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார்கள். முதலமைச்சர் தாய் மூன்று மாதத்திற்கு முன் இறந்தார். அவரைப் பற்றி தவறாக பேசியுள்ளார்கள். ஸ்டாலின் தன்னுடைய ஆட்களை அனுப்பி வீட்டில் கல்விட்டு அடித்தார்கள். சேலையை இழுத்து அசிங்கப்படுத்தினர். ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன்” என்று ஆவேசமாக பேசினார்.

மேலும் படிக்க... மதவெறியை, இனபிரிவினையை தூண்டி ஆட்சிக்கு வர துடிப்பவர்களை நாம் வீழ்த்த வேண்டும்: ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தில் ஸ்டாலின்

மேலும்,” என்னை கட்சி மாறுகிறேன் என்று கூறுகிறார்கள். ஏன் வேறு யாரும் கட்சி மாறவில்லையா? இலவச வாஷிங் மெஷின் கொடுத்தால் பெண்கள் குண்டாகிவிடுவார்கள் என்று பேசுகிறார்கள். நீங்கள் பெண்கள் செய்யும் வேலைகளை ஒரு நாள் செய்து பாருங்கள். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் வேலை குறையும், அவர்கள் மூச்சு விட நேரம் கிடைக்கும். என்னுடைய வெற்றி ஜெயலலிதாவின் வெற்றி” என்றும் ஜெயலலிதா பாணியில் நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா என்றும் குஷ்பூ கூட்டத்தில் பேச்சினார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: