ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நல்ல சூழ்நிலையில் பிறந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசும்போது அதை அமர்ந்துகொண்டு ரசிக்க மாட்டர்கள் : அமைச்சரை விளாசிய குஷ்பு

நல்ல சூழ்நிலையில் பிறந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசும்போது அதை அமர்ந்துகொண்டு ரசிக்க மாட்டர்கள் : அமைச்சரை விளாசிய குஷ்பு

திமுக நிர்வாகி குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த குஷ்பு

திமுக நிர்வாகி குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த குஷ்பு

திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குஷ்பு குறிப்பிட்டு இருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் இப்படி பேச மாட்டர்கள் என சைதை சாதிக்கு எதிராக டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பின் நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

  சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகி சைதை சாதிக் நடிகை மற்றும் பாஜக மகளிரணியைச் சேர்ந்த குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் மற்றும் கவுதமி குறித்து அவதூறாக பேசினார். இதுதொடர்பாக பாஜக மகளிரணி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

  இந்த நிலையில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தன்னைப் பற்றி அவதூறாக பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கிற்கு எதிராக டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில் பாஜக நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் திமுக நிர்வாகி பேசியுள்ளார். எனவே  சம்பந்தப்பட்டவரிடம் மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இதையும் படிங்க: திமுகவின் கைபாவையாக ஆளுநர் இருக்க மாட்டார்- எல்.முருகன்

  இதனையடுத்து புகார் மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு,  திமுகவில் இருக்கும் சைதை சாதிக் என்னைப் பற்றியும், மற்ற மூன்று பெண்களை பற்றியும் அவதூறாக பேசியிருக்கிறார். ஒரு மேடை நிகழ்ச்சியில் அத்தனை பெரிய கூட்டத்துக்கு மத்தியில் என்னைப் பற்றி அவ்வளவு அவதூறாகவும், கேவலமாகவும் பேசியதோடு, என்னை அவமானப்படுத்தினார்.

  அப்போது மேடையில் உட்கார்ந்திருந்த அமைச்சர் கேட்டு சிரித்துவிட்டு, சம்பந்தபட்ட நபரை தனிமையில் அழைத்து திட்டியதாக கூறி, நான் விளம்பரம் தேடி வருவதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கும்போது, ஒரு நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாருமே இப்படி பெண்கள் குறித்து பேசமாட்டார்கள் , பெண்களை பற்றி தவறாக பேசும்போது அதை அமர்ந்துகொண்டு ரசிக்க மாட்டர்கள் என குஷ்பு கூறினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: DMK, Kushbu, Minister Mano Tangaraj