முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்துவதா? - பா.ஜ.க கரு.நாகராஜன் கண்டனம்

ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்துவதா? - பா.ஜ.க கரு.நாகராஜன் கண்டனம்

கரு.நாகராஜன்

கரு.நாகராஜன்

மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டதற்கு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாடு பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்.கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கரு.நாகராஜன், "தேசிய புலனாய்வு பிரிவில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஜாமின் மறுக்கப்பட்ட ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு மாநிலத்தின் முதலமைச்சரே அஞ்சலி செலுத்தியது தவறு. தமிழக முதல்வரே இதுபோன்று செயல்படுவதால் பிரிவினையை உண்டாக்கி வருகின்றனர் என குற்றச்சாட்டினார்.

பாதிரியார் பொன்னையா போன்று  தவறான கருத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், திட்டமிட்டு பிரதமருக்கும், பாஜகவிற்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக பேசியவர் மீது  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழக பாஜக இதை என்ஐஏ கவனத்திற்கு கொண்டு செல்வதோடு போராட்டமும் நடத்தும் என்றார்.

மத ஒற்றுமையுடன் இருக்கும் தமிழகத்தில் மத பிரச்சினைகளை துண்டும் விதத்தில் மதபோதகர் பொன்னையன் பேசி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னையன் போன்ற நபர்களை டூல் கிட்டாக பயன்படுத்தி வருகின்றாரா? ஏன் பொன்னையன் மீது இதுவரை வழக்கு தொடுக்கவில்லை. தேச விரோத வழக்கு தொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Stan Swamy