நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்யாண சுந்தரம்

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 • Share this:
  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

  கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

  இதை தொடர்ந்து நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

   
  Published by:Vijay R
  First published: