Home /News /tamil-nadu /

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கோவை மேட்டுப்பாளையத்தில் ஜனவரி மாதம் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியான கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து அவதூறான வகையில் பேசியதை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, கல்யாணராமனை போலீசார் கைதுசெய்தனர்.

    தமிழகம் முழுவதும் அவர் மீது புகார்கள் குவிந்ததால் அவர் மீது குண்டர் சட்டம் உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட எஸ்.பியின் பரிந்துரையின் பேரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணையில் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இதைத்தொடர்ந்து, இரு குழுக்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை அக்.17ம் தேதி கைது செய்தது. கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது தற்போது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    முன்னதாக, கல்யாணராமன் கைதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற நடவடிக்கையை பாஜக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்றும், திமுக அரசு பாஜக மீது கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, BJP, Goondas act, Kalyanaraman

    அடுத்த செய்தி