முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா இனி தேர்தலில் பங்கேற்க கூடாது” - நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு பாஜக மனு

“இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா இனி தேர்தலில் பங்கேற்க கூடாது” - நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு பாஜக மனு

சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆ.ராசா

சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆ.ராசா

இந்துகள் குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் மக்களவை தலைவருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசா இனி தேர்தல்களில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லாவிடம் தமிழ்நாடு பாஜக தொழில்நுட்ப அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் மனு அனுப்பியுள்ளார்.

அன்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, இந்துக்கள் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. இதனை பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து பல்வேறு பாஜக தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஆ.ராசா மீது காவல்நிலையங்களில் புகார் அளித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

இதற்கு பதிலளித்த ஆ.ராசா, நான் மன்னிப்பு கேட்க தயார், ஆனால் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெளிவாக சொல்லுங்கள் என கூறினார். மேலும் மனுதர்மத்தில் இருப்பதைதான் தான் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு... மாநில சுயாட்சி நிச்சயம் வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தொழில்நுட்ப அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், நாடாளுமன்ற ஒழுங்கு முறை விதிகள் 233A(4)வின் படி ஆ.ராசா மீது புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற அவைத்தலைவர் ஓம் பிர்லாவிற்கு அனுப்பட்ட அந்த மனுவில், “அரசியல் ஆதாயத்திற்காக ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா எம்.பி மீது நாடாளுமன்ற ஒழுங்குமுறை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் தேர்தலில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

First published:

Tags: A Raja, BJP, Lok sabha, Om Birla