அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்

பொன்.ராதாகிருஷ்ணன்

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கே.பி.முனுசாமி கூறுவதில் தவறில்லை. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க உள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறி உள்ளார். அவர் அப்படி சொல்வதில் சொல்வதில் தவறில்லை என்றார். அ.தி.மு.கவினர் அவர்களது கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம் என்றார்.

  சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவெடுக்கும் என்று அவர் கூறினார். அ.தி.மு.க தலைமையில் எங்களது கூட்டணியில் உள்ளது என்று தெரிவித்தார். சசிகலா வருகைக்குப்பின் அ.தி.மு.கவில் மாற்றம் ஏற்பட்டால் அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி நீடிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதைப் பின்னர் பார்ப்போம் என்றார்.

  பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய முறைப்படி கேரளாவில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுவாமி விக்ரகங்கள் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.


  தோளில் விக்ரகங்களை கொண்டு செல்லும் பழக்கத்தை காரணம்காட்டி மாற்றக் கூடாது என்றும் கொரோனா காரணமாக விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியவர் இந்த ஆண்டும் கேரளாவுக்கு சுவாமி விக்ரகங்களை தோளில் சுமந்து கொண்டு செல்லும் வழக்கத்தை மாற்றுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்றும் இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
  Published by:Karthick S
  First published: