டி.டி.வி.தினகரன், சசிகலாவின் பலம், பலவீனம் அ.தி.மு.கவுக்குத் தெரியும் - பா.ஜ.க மேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி

சிடி ரவி

டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவின் பலம், பலவீனம் அ.தி.மு.கவுக்கு நன்றாகவேத் தெரியும் என்று பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதனையடுத்து, பிப்ரவரி 8-ம் தேதி தமிழகத்துக்கு வந்தார் சசிகலா. அவரது வருகையைத் தொடர்ந்து அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்பு குறித்து டி.டி.வி.தினகரனும், அவர்களுடைய நாளேடான நமது எம்.ஜி.ஆரும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. சசிகலாவுடன் இணையவேண்டும் என்று அ.தி.மு.கவினருக்கு தொடர்ந்து அழைப்புவிடுக்கப்பட்டுவருகிறது.

  இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்கள் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்’என்று தெரிவித்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த விவகாரம் குறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.கதான் பெரிய கட்சி. தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் பா.ஜ.க தேர்தலை சந்திக்க உள்ளது. அ.ம.மு.க தனிக்கட்சியாகும். டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலாவின் பலம் மற்றும் பலவீனம் அ.தி.மு.கவுக்கு நன்றாகவே தெரியும். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே சூழலுக்கேற்ப முடிவு எடுப்பவர்கள் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியும்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: