சென்னை தியாகரா நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது. அதில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை எப்படி எதிர்கொள்ளவது, நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும், எந்தெந்த இடங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றும், பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது அப்போது தான் முடிவாகும் எனவும் தெரிவித்தார். மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாஜக கூட்டணியில் இடம்பெறுமா என்பது குறித்து டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என்றும் கூறினார். அத்துடன், புதுச்சேரியில் நடக்கும் அனைத்து குழப்பத்திற்கும் முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம் என்றும் எல்.முருகன் குற்றம் சாட்டினார்.
இதனிடை,ய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டியும், இணை பொறுப்பாளராக வி.கே.சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக அறிவுசார் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இவர்கள் இருவருடன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி மற்றும் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, மேடையில் பேசிய கிஷன் ரெட்டி, எதிர்வரும் தேர்தலில் குடும்ப கட்சியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்று திமுகவை மறைமுகமாக சாடினார். பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் 4 பேருக்கும் 'வேல்' பரிசாக வழங்கப்பட்டது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AMMK, L Murugan, TN Assembly Election 2021