தமிழகம் முழுவதும்
பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் தமிழக காவல்துறையினர், அரசு அலுவலர்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கடவுள்: தங்க மோதிரம் அணிவித்த திமுகவினர்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் ஆளும் திமுக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் 21 மாநராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால், திமுகை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பெரும் தோல்வியை தழுவி உள்ளன.
எனினும், தனித்துப்போட்டியிட்ட பாஜக கனிசமான வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கோடு இருந்து வந்த பாஜக, இந்த தேர்தலில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கனிசமான வெற்றியை பெற்று தனது செல்வாக்கை நிரூபித்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க வெற்றி இதுவரை இல்லாத அளவிற்கு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதையும் படிங்க - Tamilnadu Localbody Election : ஒரு ஓட்டு வித்தியாசத்தில் திமுகவை தோற்கடித்த பாஜக...
திமுக தொண்டர்கள் தேர்தல் நெருங்க நெருங்க மிக மோசமாக நடந்து கொண்டார்கள். பணபலம் , அதிகார பலத்தை திமுக பயன்படுத்தியது. இது போன்ற தேர்தலை வைத்து கொண்டு ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது. எதற்கெடுத்தாலும் பணம் தான்.
தமிழகம் முழுவதும் தனித்து நின்றது லாபமா? நஷ்டமா என்ற கேள்விக்கு, லாபம் என கூறினார்.
திமுக குதிரை பேரம் நடத்தி வெற்றி பெற்றவர்களை கபளிகரம் செய்ய வாய்ப்புள்ளது. அதிமுக ஆட்சியில் இல்லாததால் இந்த தேர்தலில் சரிவை சந்தித்துள்ளார்கள். திமுக அதிகார உச்சத்தில் உள்ளது. ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வேறுபாடு அதிகம்.
மறைமுக தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்ற முயற்சி செய்யுமா? என்ற கேள்விக்கு நடைபெறுவது தேர்தல். தேர்தலில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.