• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக வியூகம் - 17 பேர் குழு அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக வியூகம் - 17 பேர் குழு அறிவிப்பு

அண்ணாமலை

அண்ணாமலை

பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்காக ஒவ்வொரு கட்சியும் முன்னேற்பாடுகள் செய்து வருகின்றன. அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலை சந்திக்க 17 பேர் கொண்ட தனிக்குழுவை அறிவித்துள்ளார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அந்த குழுவில், மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், செல்வகுமார், ராமஸ்ரீனிவாசன், நாகராஜன், மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, பொதுக்குழு உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறப்பு அழைப்பாளர்கள் ராமலிங்கம், கு.க.செல்வம், சம்பத் உள்ளிட்டோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

    Must Read : மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - தடையை மீறி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

    பிற 27 மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவின்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டன. அதன்படி, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். இதனால், அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில், பாஜாக புது வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: