’வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது’ - குஷ்பு கருத்து

’வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது’ - குஷ்பு கருத்து

குஷ்பு

வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளதாக குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழக பாஜக சார்பாக "விவசாயிகளின் நண்பன் மோடி" என்கிற பிரச்சாரப் பயணம் தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. அந்த வகையில், மதுரை ஊமச்சிகுளத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் குஷ்பு கலந்துகொண்டு பேசினார்.

    அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வட மாநிலங்களில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தூண்டிவிடப்படுகிறது. ஒன்றரை லட்சம் விவசாயிகள் ஒத்துக்கொண்டதால் வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகள் விவசாயிகள் வாழ்வில் விளையாடவேண்டாம். வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது என்றார்.

    மேலும் கூறுகையில், பாஜக விவசாயிகளை கடவுள் போல பார்த்து வருகின்றது. தமிழகத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பேசவில்லை. விவசாயிகளைப் பாதுகாக்கவே வேளாண் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்தை அனைவரும் படித்துப் பார்க்கவேண்டும். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் விசயத்திற்கு வேளாண் சட்டத்தில் தீர்வு கூறப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் 5 இலட்சம் லாபம் கிடைக்கும். 10 ஆண்டுகளில் திமுக - காங்கிரஸ் மக்களின் பிரச்னைகளைப் பேசவில்லை, மக்கள் பிரச்னைகளை தீர்த்திருந்தால் திமுக - காங்கிரஸ் ஆட்சி வந்திருக்கும் என்று தெரிவித்தார்.

    Also read: ஜனவரி 9-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு- செயற்குழு கூட்டம்

    டெல்லியில் நடைபெறும் போராட்டம் விவசாயிகள் போராட்டம் அல்ல, எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்ட போரட்டம்தான் நடைபெறுகின்றது என்று விமர்சித்த குஷ்பூ, முத்தலாக் சட்டத்தால் நிறைய பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது என்றார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யலாம் என்று கூறிய அவர், பாஜக படிப்படியாக மக்களின் நம்பிக்கையை பெற்று வருகிறது; அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை மக்கள் எதிர்க்கவில்லை. யார் முதல்வர் வேட்பாளர் என்பதை இரு தலைமைகளும் பேசி மட்டுமே முடிவுசெய்யும், ஜே.பி.நட்டாவும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து பேசி முடிவெடுத்து அறிவிப்பார்கள் எனக் கூறினார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published: