அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ எல்லை மீறி பேசியுள்ளனர் - ஹெச்.ராஜா காட்டம்

கூட்டணி தர்மத்தை மதித்து தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ எல்லை மீறி பேசியுள்ளனர் - ஹெச்.ராஜா காட்டம்
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.
  • Share this:
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, நீதிபதி சந்துரு என்பவர் தனது முகநூல் பக்கத்தில் மத்திய நிதியமைச்சரை ஊறுகாய் மாமியார் என விமர்சனம் செய்துள்ளார். அநாகரிகமான வார்த்தையைப் பதிவிட்டவர் எப்படி நீதிபதியாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை பா.ஜ.கவில் சேர்ந்தால் உங்களுக்கு என்ன எரிச்சல். நீதிபதி சந்துரு சாதிய வெறுப்புணர்வோடு நடந்து கொண்டுள்ளார். அவர் அளித்த தீர்ப்புகள் சந்தேகத்திற்குரியன என்றார். மேலும், ஐஏஎஸ் ஆக இருந்துகொண்டு இந்து விரோத, தேச விரோதக் கண்காட்சியை லயோலா கல்லூரியில் திறந்து வைத்த சகாயம் பற்றி இங்கு யாரும் பேசவில்லை என்று கூறினார்.

Also read: உண்மையைத் தேடாமல் கடவுளை குற்றம் சாட்டுகிறார் - நிர்மலா சீதாராமன் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..


முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜு, “டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜக வளரவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். அது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா, ஆன்மீகத்திற்கும் கல்விக்கும் சேவையாற்றிய நகரத்தார் சமுதாயப் பெண்களை இழிவாகப் பேசி சிக்கலில் இருந்த செல்லூர் ராஜூவைக் காப்பாற்றியது நான் தான். இதை துணை முதல்வரிடம் கேட்டால் தெரியும் என்றார்.



செல்லூர் ராஜூவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்ல என்று கூறிய அவர், தமிழக அரசு அதிகாரிகள் தவறு செய்தால் சுட்டிக்காட்டுவது என் பொறுப்பு. தமிழக அரசை நான் விமர்சிப்பது கிடையாது. கூட்டணி தர்மத்தை மதிக்கிறேன். தோழமைச் சுட்டுதலோடு குறைகளைச் சொன்னால் பரிகாரம் செய்ய வேண்டும். எல்லை மீறிப் பேசுவது கூட்டணிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தும். கூட்டணியைக் கெடுக்க வேண்டும், பிரச்னை கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்களா என தெரியவில்லை என்றார்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading