நீட் தேர்வில் திமுகவின் பசப்பு வார்த்தைகளை தமிழக குழந்தைகள் நம்ப வேண்டாம்.திமுக அரசு நீட் வேண்டாம் என்று நினைத்தால் உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் கடந்த 2016 முதல் 2020 ஆண்டு வரை 435 பயனாளிகளுக்கு வீடு கட்டாமலேயே பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும். முறைகேடு அதிகாரிகளை கையில் விலங்கிட்டு வீதியில் அலைத்து வர வேண்டும். மேலும் இப்பிரச்சினையில் முதல்வர் கருத்து தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது.
கந்தர்வகோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் வீடுகள் கட்டாமலேயே பணம் எடுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது. நீட் தேர்வில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் கூச்சலிட்டவர்கள், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் லஞ்சம் கொடுக்க முடியாமல் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வாய்த்திறக்கவில்லை.
தமிழகம் தான் ஊழல் மிகுந்த மாநிலம் என்று அமித்ஷா சொன்னதற்கு எப்படி சொல்லலாம் என கேட்டனர். ஆனால் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் பல முறைகேடுகள் தமிழகத்தில் நடந்துள்ளன. தமிழ் தாய் என்றவுடன் வணங்குகின்ற மாதிரி உருவம் இருக்க வேண்டும் தலைவிரி கோலத்துடன் இருந்த உருவத்திற்கு மாற்றம் கொடுத்து அண்ணாமலை தெய்வீக வடிவத்துடன் உருவம் கொடுத்து படம் பதிவிட்டுள்ளார்.
தமிழில் வடமொழி சொற்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கணம் உள்ளது. தமிழில் மெய் எழுத்தில் எந்தவொரு சொல்லும் தொடங்க கூடாது. திராவிடம் என்ற சொல் சமஸ்கிருத சொல் தான். ‘ஸ’ தமிழ் சொல் இல்லை என அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார். அப்படி என்றால் முதல்வருக்கு ஸ்டாலின் என்று உள்ளது. "ஸ்" தமிழில் எழுத்து துவங்க கூடாது எனவே ஸ்டாலின் என்பதை சுடாலின் என்று தான் கூப்பிட முடியும். அதை அவர்கள் ஏற்பார்களா.
தமிழகத்தில் அமைச்சர்களுக்கு புத்தி வறண்டு விட்டது.தேவையில்லாத பிரச்சினையை அமைச்சர் உருவாக்க வேண்டாம். நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு தான் பணம் கொடுக்கிறது. அதில் மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வாங்குகின்றனர். விவசாயிகளை சுரண்டினால், அவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். மேலும் கொள்முதல் நிலையங்களை இந்திய உணவு கழகமே எடுத்து நடத்தும் அளவிற்கு சூழ்நிலையை உருவாக்க முடியும்.
Also Read: பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
வீடு கட்டி கொடுக்கிறது மோடி மாடல்; வீடு கட்டிக் கொடுக்காமலேயே திருடுவது திராவிட மாடல். ஊழல் தான் திராவிட மாடல். தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்ய முடியவில்லை என்பதற்காக மக்களை திசை திருப்ப தான் திராவிடன் மாடல் என்று கூறி வருகின்றனர். உச்சநீதிமன்றம் உத்தரவால் தான் நீட் வந்தது. நீட் தேர்வில் திமுகவின் பசப்பு வார்த்தைகளை தமிழக குழந்தைகள் நம்ப வேண்டாம்.திமுக அரசு நீட் வேண்டாம் என்று நினைத்தால் உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும். அதைவிடுத்து தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என ப.சிதம்பரம் மனைவி நளினி கூறியுள்ளார், என்றார்.
செய்தியாளர் : முத்துராமலிங்கம் (காரைக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, DMK, Dravidam, H.raja, H.raja bjp, H.raja speech, HRaja, Karaikudi, MK Stalin, Politics