ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘பி.ஃப்.ஐ. அமைப்பை தடை செய்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும்  மத்திய அரசு வெளியிட வேண்டும்’ – கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

‘பி.ஃப்.ஐ. அமைப்பை தடை செய்ததற்கான காரணங்களையும், ஆதாரங்களையும்  மத்திய அரசு வெளியிட வேண்டும்’ – கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

கே.எஸ். அழகிரி

கே.எஸ். அழகிரி

ஆதாரத்தை வெளியிட்டால்தான் பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பிற்காக PFI அமைப்பை தடைசெய்துள்ளதா? அல்லது அரசியல் எதிரிகளை வீழ்த்த தடை செய்துள்ளதா? என்பது தெரிய வரும் – கே.எஸ். அழகிரி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Udhagamandalam (Ooty), India

  ‘பி.ஃப்.ஐ. அமைப்பை தடை செய்ததற்கான காரணங்களையும், அதற்கான ஆதாரங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

  தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டாவது முறையாக செவ்வாய்கிழமை 8 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

  இதையடுத்து, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு தொடர்புடைய அமைப்புகளான கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள், பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துக்கு தடை... காரணம் என்ன?

  இந்நிலையில் ‘பி.ஃப்.ஐ. அமைப்பை தடை செய்ததற்கான காரணங்களையும், அதற்கான ஆதாரங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

  ஊட்டியில் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த கே.எஸ். அழகிரி, PFI அமைப்புகளின் மீது NIA கடும் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு PFI அமைப்பின் பின்புலம் என்ன? அவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? வன்முறையில் அவர்களுக்குப் பங்கு இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

  ரூ. 50 லட்சம் திட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முறைகேடு… மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி புகார் மனு

  ஆனால் நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்வதற்கு முன்பு அன்றைய உள்துறை அமைச்சர் பாட்டில்  ஆர்எஸ்எஸ் அமைப்பை ஏன் தடை செய்கிறோம் என்பதற்கான காரணங்களை விளக்கி நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் ஆதாரபூர்வமாக விளக்கம் அளித்தார்.

  அதை போல இன்றைக்குள்ள பாரதிய ஜனதா அரசு PFI தடைக்கான காரணங்களை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

  அதற்கு ஆதார பூர்வமான அறிக்கையை வெளியிட வேண்டும். அவ்வாறு ஆதாரபூர்வ அறிக்கை வெளியிட்டால் தான் பாரதி ஜனதா அரசு நாட்டின் பாதுகாப்பிற்காக PFI அமைப்பை தடைசெய்துள்ளதா? அல்லது அரசியல் எதிரிகளை வீழ்த்த தடை செய்துள்ளதா? என்பது தெரிய வரும் என தெரிவித்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: KS Alagiri