Home /News /tamil-nadu /

ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே பாஜக ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது: கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே பாஜக ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது: கே.எஸ்.அழகிரி

ராகுல் காந்தி பயணம்

ராகுல் காந்தி பயணம்

ராகுல் மக்களோடு மக்களாகப் பயணிக்கிறார். மக்கள் துன்பத்தை நேரிடையாக அறிகிறார். அவர் எழுப்புகிற கேள்விகளுக்குப் பதில் கூற தயாராக இல்லாத பாஜக, திசைதிருப்புகிற அரசியலைச் செய்கிறது - கே.எஸ். அழகிரி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 100 கிலோமீட்டர் பயணத்திலேயே பாஜக ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7ந்தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கினார். தற்போது கேரளாவின் ராகுல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு ஜவஹர்பால் மன்ஞ்சில் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, நாட்டில் சாதி, மத வேறுபாடுகளை களைந்து அன்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை கொண்டுவர வேண்டும் என்பதே தனது யாத்திரையின் நோக்கம் என்று கூறினார்.

    இந்த நிலையில் ராகுல்காந்தியின் நடைப்பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு மக்கள் பேராதரவு வழங்கி வருவதாக  தெரிவித்துள்ளார். மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பாஜகவுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    ராகுல் காந்தியின் 100 கிலோ மீட்டர் பயணத்திலேயே பாஜகவின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவே ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் தொடக்கமாகும்' என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிளவுபட்ட மக்களை ஒன்றுபடுத்துகிறது. மக்களோடு மக்களாகப் பயணிக்கிறார். மக்கள் துன்பத்தை நேரிடையாக அறிகிறார். அவர் எழுப்புகிற கேள்விகளுக்குப் பதில் கூற தயாராக இல்லாத பாஜக, திசைதிருப்புகிற அரசியலைச் செய்கிறது. ஆனால், அதில் பாஜக வெற்றி பெற முடியாது என  கே.எஸ். அழகிரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

     

     

     
    Published by:Arunkumar A
    First published:

    Tags: Congress, K.S.Alagiri, Rahul gandhi

    அடுத்த செய்தி