பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வி.பி.துரைசாமிக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் நிர்வாகிகள் மாற்றம் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் நடைபெறும். அந்த வகையில் தற்போது 400க்கும் மேற்பட்ட பொறுப்புகள் மீண்டும் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலை தேசிய பாஜக தலைவரிடம் வழங்கி பின்னர் ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் நாளை பாஜக புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில பொதுச் செயலாளர், மாநில துணை தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பதவிகளுக்கான பெயர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவில் சமீபத்தில் இணைந்த விபி துரைசாமி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: தமிழக பா.ஜ.கவில் நிர்வாகிகள் மாற்றம்.. நாளை அறிவிப்பு
அதேபோல ஏற்கனவே நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நயினார் நாகேந்திரன் தனக்கு துணை தலைவர் பதவி வழங்கி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார். இந்த நிலையில் இருவருக்கும் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: கச்சத்தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு கேட்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
மேலும் பல புதிய பொதுச் செயலாளர்கள் ,புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள கூடிய வகையில் இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.