ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சம்பாதிப்பது கோடி.. கொடுப்பது லட்சம்: நடிகர் சூர்யா குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனம்

சம்பாதிப்பது கோடி.. கொடுப்பது லட்சம்: நடிகர் சூர்யா குறித்து காயத்ரி ரகுராம் விமர்சனம்

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

ஒரு சமூகத்தை குறிவைத்த சூர்யாவை மட்டும் ஆதரிக்கிறீர்கள். உங்கள் நோக்கம் என்ன? யார் யாரைப் பிரிக்கிறார்கள்? திமுக குடும்பத்தின் அடிமைகளாக சினிமா மாறிவிட்டது என்றும் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ராஜக்கண்ணு மனைவி பார்வதியின் நிஜவாழ்க்கை கதை மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்த நடிகர் சூர்யா, அனைவரும் கேள்வி எழுப்பிய பின்னர் லட்சங்களை தருவதாக நடிகையும் பாஜக கலாச்சார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. அதேவேளையில், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்திருப்பதாக பாமக, வன்னியர் சங்கம் ஆகியவை குற்றம் சாட்டி வருகின்றன.  சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

காவல்துறை சித்ரவதையில் உயிரிழந்த ராஜாக்கண்ணு என்ற பழங்குடி நபரின் மனைவி பார்வதி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட் செய்வதாக  நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.இந்நிலையில், பாஜக கலை கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் இதனை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் நிஜ வாழ்க்கை கதை மூலம் நான் கோடிகளை சம்பாதிப்பேன், எல்லோரும் கேள்வி எழுப்பிய பிறகு நான் உங்களுக்கு லட்சங்களை தருகிறேன். சமூக நீதி..” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், சூர்யாவுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களை “திமுக தொண்டர்கள் ரசிகர் பட்டாளத்தை உதயநிதியில் இருந்து சூர்யாவுக்கு மாற்றிவிட்டார்களா? அடுத்த திமுக முதல்வர் வேட்பாளர் நடிகர் சூர்யா? நான் குழப்பத்தில் இருக்கிறேன். why tension? Cool..” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், நடிகர் சூர்யாவை ஆதரித்து பதிவிட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு கேள்வி எழுப்பியுள்ள காயத்ரி ரகுராம், ரஜினிகாந்த் சார் உங்களுக்கு இரண்டு பெரிய படங்களில் வாய்ப்பு கொடுத்து உங்களை பெரிய இயக்குனராக்கிவிட்டார்.. ரஜினி சாரை திமுக ஆதரிக்கும் Plip Plip YouTube channel தகாத வார்த்தைகளால் திட்டினார் விமர்சித்தார். நீங்களும் சினிமா துறையும் ஏன் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை?

ஆனால் ஒரு சமூகத்தை குறிவைத்த சூர்யாவை மட்டும் ஆதரிக்கிறீர்கள். உங்கள் நோக்கம் என்ன? யார் யாரைப் பிரிக்கிறார்கள்? சினிமாவை முழுமையாக திமுக கைப்பற்றியது. திமுக குடும்பத்தின் அடிமைகளாக சினிமா மாறிவிட்டது. சாதி, மதம் இல்லாத ஒரே தொழில் சினிமா மட்டுமே.இப்போது அது தவறான கைகளுக்கு சென்றுவிட்டது. என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் படிக்க: சூர்யாவை விமர்சிப்பதைத் தவிர்க்கவேண்டும் - அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம்

First published:

Tags: Actor Surya, Gayathri Raguramm, Jai Bhim