Home /News /tamil-nadu /

தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கிய பா.ஜ.க

தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கிய பா.ஜ.க

அண்ணாமலை

அண்ணாமலை

தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் குடும்பத்துக்கு பா.ஜ.க சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவப் பள்ளியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி படித்துவந்துள்ளார். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் அருந்தினார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஹாஸ்டல் வார்டன் படிக்கவிடாமல் அதிக வேலை வாங்கியதே தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அவரை, மதம் மாறுவதற்கு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியது என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆரம்பம் முதலே குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கைவைத்துவருகின்றனர். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தநிலையில், அரியலூர் மாவட்டத்திலுள்ள தற்கொலை செய்துகொண்ட மாணவியின் கிராமத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவியின் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    கனிமொழி குறித்து புகழாரம்: பதவி பறிப்பு - ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்ஸை சந்தித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன்



    இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, ‘அனிதாவிற்கு ஒரு நியாயம் இந்த மாணவிக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பினார்.


    மேலும் அவர் பேசியபோது, “மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க போராடும். பா.ஜ.க குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது பா.ஜ.க சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Annamalai, Ariyalur, BJP

    அடுத்த செய்தி