கன்னியாகுமரி அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு..

அண்ணாசிலை பீடம் முன்பு காவிக் கொடி கட்டியவர்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு..
அண்ணா சிலை
  • Share this:
கன்னியாகுமாரியில் உள்ள அண்ணா சிலை பிடத்தில் மர்ம நபர்கள் காவி கொடி கட்டியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை பீடத்தில் மர்மநபர்கள் சிலர் காவிக் கொடி கட்டி சென்றுள்ளனர். மேலும் பழைய சீரியல் பல்பு மற்றும் சிவப்பு பூக்கள் கொண்ட ஆரம் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு ஏற்கனவே காவித்துண்டு போர்த்திய நிலையில் தற்போது குமரியில் அண்ணாசிலை பீடத்தில் காவிக் கொடி கட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த செயலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading