Sexual Harrassment | BJP | பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த விழுப்புரம் பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்..

Sexual Harrassment | BJP | பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த விழுப்புரம் பாஜக பெண் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்..

மாதிரிப் படம்

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதனிடம் கேட்டபோது, புகாரின் பின்னால் திமுக உள்ளிட்ட கட்சிகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக, மாவட்ட பாஜக மகளரணி பொதுச் செயலாளர் காயத்ரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கட்சி அவப்பெயர் விளைவிக்கும் நடந்து கொண்டதாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார். பாஜக மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் தன்னிடம் இருந்து 5 லட்சம் ரூபாயைப் பறித்துக் கொண்டு தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜக மாநிலத் தலைவர் எல் முருகனுக்கு புகார் அளித்திருந்தார். புகார் கடிதமும், அவர் கலிவரதனுடன் பேசிய ஆடியோக்களும் கடந்த 20ம் தேதி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.

    தொடர்ந்து, அரசியல் வாழ்க்கை என்ற பெயரில் தனது வாழ்க்கையை கலிவரதன் அழித்து விட்டதாக பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது புகாரின் பேரில் பாஜக மாநிலத் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், திங்கட்கிழமை மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளார்.

    அதில், விஏடி கலிவரதன் மகளிர் அணி பொதுச் செயலாளர் பதவி வாங்கித் தருவதாக ஆசை காட்டி, 5 லட்சம் ரூபாயை தன்னிடம் இருந்து பறித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது தன்னை அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    அப்போது செல்போனில் அதை வீடியோ எடுத்து அதை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். தான் கொடுத்த 5 லட்சம் ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

    இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதனிடம் கேட்டபோது, புகாரின் பின்னால் திமுக உள்ளிட்ட கட்சிகள் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிர் அணி செயலாளர் நேரடியாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதனிடையே விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுசெயலாளர் காயத்திரி ஐயப்பன் கட்சிக்கு களங்கமும் அவப்பெயர் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது. மேலும் அவரிடம் பாஜக நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: