Home /News /tamil-nadu /

விநாயகர் சதுர்த்தி சிலை அனுமதி விவகாரம்... எச்.ராஜா ட்வீட் குறித்து பாஜக விளக்கம்

விநாயகர் சதுர்த்தி சிலை அனுமதி விவகாரம்... எச்.ராஜா ட்வீட் குறித்து பாஜக விளக்கம்

எச். ராஜா ட்வீட் குறித்து நாராயணன் விளக்கம்

எச். ராஜா ட்வீட் குறித்து நாராயணன் விளக்கம்

விநாயகர் சதுர்த்தி சிலை அனுமதி விவகாரம் தொடர்பாக ஆண்மையுள்ள அரசு என்று எச்.ராஜா பதிவிட்டிருந்த ட்வீட் குறித்து பாஜக விளக்கம் அளித்துள்ளது

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதிக்க வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்து வருகின்றன.

பாஜக தலைவர் முருகன், முதலமைச்சர் பழனிசாமியிடம் நேரில் சென்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்கள் சிலர், சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை விமர்சித்தும் வருகின்றனர்.

ஆனால், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும், திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை தொடர்வதாலும், சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு திட்டவட்டமாக அனுமதி மறுத்துவிட்டது.

கர்நாடக அரசு விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி  வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டி,  பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ட்வீட் செய்திருந்தார். அதில் கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு.என்று எழுதியிருந்தார்.

 



இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. தமிழக அரசை ஆண்மையற்ற அரசாக கூறியதாக எ.ராஜாவை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

இதையடுத்து,  ”தமிழக அரசை கூறியதாக  தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்” என பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறியுள்ளார்.



அதேபோல, பாஜக தேசிய தலைவர் எச் ராஜா தெரிவித்தது ஒட்டுமொத்த இந்துக்களின் எண்ணமாக இருக்கிறது எனவும் நாராயணன் தெரிவித்தார்.
Published by:Yuvaraj V
First published:

Tags: BJP, H.raja, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

அடுத்த செய்தி