பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை... சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய பாஜகவினர் கோரிக்கை!

செந்தில்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்த நபரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர்.

news18
Updated: April 15, 2019, 4:52 PM IST
பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை... சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய பாஜகவினர் கோரிக்கை!
கொலை செய்யப்பட்ட செந்தில்குமார்
news18
Updated: April 15, 2019, 4:52 PM IST
நாகையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை காமேஸ்வரம் பகுதியில் உள்ள கீரன் ஏரியில், ஆண் சடலம் மிதப்பதை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கீழையூர் போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Also read... பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அடித்துக்கொலை!

இதில், கொலையான நபர் திருப்பூண்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், இவர் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் தலைவராக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து செந்தில்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்த நபரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர்.

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...