• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண்களின் கையில் தாமரையை மலர வைத்த பாஜக மகளிர் அணி!

பெண்களின் கையில் தாமரையை மலர வைத்த பாஜக மகளிர் அணி!

பாஜக பிரசாரம்

பாஜக பிரசாரம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணி, அங்கிருந்த பெண்களின் கைகளில் தாமரையை மெகந்தியாக வரைந்து வாக்கு சேகரித்தனர்.

    மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை தொகுதியில் பாஜக சார்பில் சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    படிக்க... பொள்ளாச்சி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: சிசிடிவி காட்சிகள் மூலம் ஒருவர் கைது!

    அவருக்காக பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முழு வீச்சாக பரப்புரை செய்து வருகின்றனர். கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் திரண்ட அக்கட்சி மகளிர் அணியினர், அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் கைகளில் தாமரையை மெகந்தியாக வரைந்தனர்.

    மேலும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

    படிக்க... தெர்மாகோல் விடும் திட்டம் யார் தந்தது? ரகசியத்தை வெளியிட்ட செல்லூர் ராஜூ!

    Also See...



     




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: