ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பாஜகவின் மாநில துணைத்தலைவர்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பாஜகவின் மாநில துணைத்தலைவர்!

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பாஜக பிரமுகர்

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பாஜக பிரமுகர்

கமல்ஹசன் முன்னிலையில், தமிழ்நாடு பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவர் முனியசாமி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக பாஜக பொருளாதார அணியின் மாநில துணைத்தலைவராக இருந்தவர் வீ. முனியசாமி.  இவர் அக்கட்சியிலிருந்து விலகி நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில், நீதி மய்யம் கட்சியில்  இணைந்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நேற்று (4.12.2022) பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் (பொருளாதாரம்) வி.முனியசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்தார்’ என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்   வருகை தந்தார்.  நிகழ்ச்சியின்போது  பாஜகவின்  வீ.முனியசாமி பொருளாதார பிரிவின் மாநில துணைத்தலைவர் வீ.முனியசாமி, கமல்ஹாசன்  முன்னிலையில்  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அப்போது துணைத்தலைவர்கள் மௌரியா, தங்கவேலு மற்றும் மதுரை மண்டல செயலாளர் அழகர் ஆகியோர்  உடனிருந்தனர்.

First published:

Tags: BJP, Kamal Haasan