சசிகலா இணைப்பு தொடர்பாக பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை - எல்.முருகன் விளக்கம்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

சசிகலா இணைப்பு தொடர்பாக பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுடன் தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில் பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார். அவர்களுக்கிடையே சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையின்போது, சசிகலாவை அ.தி.மு.கவில் மீண்டும் சேர்ப்பது குறித்தும், அ.ம.மு.கவை கூட்டணியில் இணைப்பது குறித்தும் பேசியதாக செய்திகள் வெளிவந்தன. சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாகவே தொகுதி பங்கீடு தாமதமாகிறது என்று செய்திகள் வெளிவருகின்றன.

    இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், ‘சசிகலா இணைப்பு தொடர்பாக பாஜக பேசுவதாக வரும் தகவல் தவறு. சசிகலா இணைப்பு என்பது அ.தி.மு.க உட்கட்சி விவகாரம். அதில் பா.ஜ.க தலையிடமாட்டோம். தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேசிவருகிறோம். தி.மு.க எந்த காலத்திலும் ஆட்சிக்கு வராது. மீண்டும் ஆட்சிக்கு வந்து தி.மு.க நிலம் அபகரிக்கும் வேலையைச் செய்யும். அதை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்த வாய்பை தி.மு.விற்கு மக்கள் கொடுக்க மாட்டார்கள். தி.மு.க தோல்வி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஓன்று’ என்று தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: