அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடுகிறதா?அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை

அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர்தூவி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,  ‘அப்துல்கலாம் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர் எனவும் விஞ்ஞானத்திற்கு பலம் சேர்த்தவர் என்றார். இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் ஆவதை சிலர் தடுத்துவிட்டனர் எனவும் தி.மு.கவும் தடுத்தது என விமர்சித்தார்.

மேலும், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறது. அதனால் பிரதமருடன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்தனர். அதற்கு உரிமை உண்டு. ஆனால், உட்கட்சி விவகாரத்தில் தலையீடு செய்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் இதை நீதிமன்றத்தில் எதிர் கொள்வார்கள் என தெரிவித்தார். மீனவர் சட்ட மசோதாவில் குறைகள் இருந்தால் பா.ஜ.க கவனத்தில் கொள்ளும் எனவும் மீனவர்கள் கோரிக்கைகாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை எனவும், தமிழக காங்கிரஸ் அரசியல் ரீதியாக இதுபோல் குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுகின்றனர் என்றார். இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து அவர் சமூகத்தை முன்னேற்றி இருக்கிறோம் எனவும், ஆனால் தி.மு.கவில் இதுபோல் இல்லை. சிலரை வளரவிடுவதில்லை என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செல்போன் ஒட்டுக்கேட்பு என்ற சர்ச்சை ஆதாரமில்லாதது. திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கி இருக்கிறது காங்கிரஸ் எனவும் குற்றம்சாட்டினார்.
Published by:Karthick S
First published: