ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’இட ஒதுக்கீடு விவகாரத்திலிருந்து திசை திருப்பவே திருமாவளவன் பேச்சு சர்ச்சையாக்கப்படுகிறது’ - இயக்குநர் கவுதமன் கருத்து..

’இட ஒதுக்கீடு விவகாரத்திலிருந்து திசை திருப்பவே திருமாவளவன் பேச்சு சர்ச்சையாக்கப்படுகிறது’ - இயக்குநர் கவுதமன் கருத்து..

இயக்குநர் கவுதமன்

இயக்குநர் கவுதமன்

இடஒதுக்கீடு விவகாரத்திலிருந்து மக்களை திசை திருப்பவே திருமாவளவன் பேச்சு சர்ச்சையாக்கப்படுவதாக கவுதமன் கருத்து தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தை மறைப்பதற்காகவே பாரதிய ஜனதா கட்சியினர் திருமாவளவன் பேச்சை சர்ச்சையாக்கி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று தமிழ்ப் பேரரசுக் கட்சித் தலைவரும் திரைப்பட இயக்குநருமான கவுதமன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த கவுதமன், ”மனுதர்மம் பெண்களை இழிபடுத்துவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறிய பிறகு உருவான சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, திருமாவளவன் பேசியதை முன்னும், பின்னும் வெட்டி பெண்களுக்கு எதிராக பேசியதாக திட்டமிட்டே அவரைப் பழிவாங்கும் நோக்கில் சதி செய்யப்படுவதாக” கூறினார்.

மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்திப் பேசிய கவுதமன், ”எந்தச் சூழ்நிலையிலும் மிகப்பெரும் எண்ணிக்கையிலுள்ள எங்கள் மருத்துவ இடங்களை இம்மண்ணைச் சாராதவர்கள் ஆக்கிரமித்துவிடக் கூடாது என்றார். மேலும், திருமாவளவன் மீது பழி சுமத்தி இவ்வளவு பெரிய சர்ச்சையை உண்டாக்கி, கல்வி உரிமையை முற்றிலும் பறிப்பதற்கான சதிகரமான நாடகம் நடப்பதாகவும், தமிழக மக்கள் தம் உரிமைகள் பறிபோக தாமே காரணமாக இருந்துவிடக்கூடாது” என்றும் அவர் கூறினார்.

First published:

Tags: Director Gowthaman, OBC Reservation