சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட
திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி
ஸ்டாலின் கருணாநிதியை காட்டிலும் ஸ்டாலின் ஆபத்தானவர் என்று ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில்
பாஜக தலைவர் பேசியதுதான் முதலமைச்சருக்கு கிடைத்த ஆகச்சிறந்த பாராட்டு என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னையில் ரத்ததானம் செய்த ஆயிரத்து 70 இளைஞர்களுக்கு பாராட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் இரத்ததானம் செய்த இளைஞர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில்
திமுக ஆட்சி அமைந்தால் இந்துக்களுக்கு எதிராக இருக்கும் என பாசிச சக்திகள் தெரிவித்தனர். ஆனால் சேகர்பாபு அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் திமுக அனைவருக்குமான கட்சி என்பதை அவர் செய்து வரும் செயல்களை மக்கள் பார்த்து புரிந்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல் திமுக தலைவருக்கு கிடைத்த ஹாட்ரிக் வெற்றி. பிரசாரத்திற்காக சென்ற போது மகளிர் இலவச பேருந்து திட்டத்தை ஸ்டாலின் பஸ் என்றே மக்கள் அழைத்தார்கள். எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கடந்த 10 மாத உழைப்பின் வெளிப்பாடு நாளை தாக்கலாகும் நிதி நிலை அறிக்கையில் தெரியவரும்: அமைச்சர் பிடிஆர்
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 10 மாதங்களாக சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதை இந்தியாவே பாராட்டுகிறது. இருந்தாலும் கலைஞரை காட்டிலும் ஸ்டாலின் ஆபத்தானவர் என்று பாஜக தலைவர் விமர்சித்தது மிகச்சிறந்த பாராட்டு என்றார்.
மேலும் படிக்க: 7.5 சதவீத இட ஒதுக்கீடு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அமைச்சர்களில் மிகச்சிறந்த அமைச்சராக தொடர்ந்து மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டு வருபவர் அமைச்சர் சேகர்பாபு என்றும் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அமைச்சர் சேகர்பாபு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.