அ.தி.மு.க அரசை விமர்சிக்கும் தமிழக பா.ஜ.க! கூட்டணியில் விரிசலா?

அ.தி.மு.க அரசை விமர்சிக்கும் தமிழக பா.ஜ.க! கூட்டணியில் விரிசலா?
அதிமுக தலைமை அலுவலகம்
  • News18
  • Last Updated: October 2, 2019, 9:50 PM IST
  • Share this:
அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவி வரும் வேளையில், அதிமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைபக்கத்தில் பதிவிட்டு வருகிறது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு பாஜக வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல் உள்ளதால் கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கும் விதத்தில் தமிழக பாஜகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.

மணல் கொள்ளை நடைபெறுவதை சுட்டிக்காட்டும் பதிவு ஒன்றில், உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தமிழக அரசின் 'சிஸ்டம்' எப்படி இந்த சட்டவிரோத நடவடிக்கையை அனுமதிக்கிறது என தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


அதே போன்று மதுரையில் போடாத சாலையை போட்டதாக ஒப்பந்ததாரர் கூறுவதை சுட்டிக்காட்டி "அகப்பட்டதை சுருட்டிக்கொள்ள பார்க்கிறதா மாநில அரசு? " என்றும் இது போன்ற ஊழல்களை வெளி கொண்டுவர லோக் ஆயுக்தா மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வதாக இரு கட்சிகளும் கூறி வந்தாலும் அவர்களது உறவு சுமூகமாக இல்லை என்பது இதுபோன்ற பதிவுகளின் மூலம் கண்கூடாகத் தெரிய வருகிறது.


அதேவேளையில், ஊழல் புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவதாக தமிழக பாஜக ஐடி அணி தலைவர் நிர்மல் குமார் நியூஸ்18 தமிழ்நாட்டுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்குள் மக்களின் செல்வாக்கைப் பெற மாநில அரசுக்கு எதிராக செயல்பட வேண்டிய அவசியத்தை பாஜக உணர்ந்துள்ளதாகவும், இதனால் தான் அதிமுக ஆட்சியின் ஊழல் புகார்களை வெளிப்படுத்தி வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Also see:

First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading