Home /News /tamil-nadu /

திமுக எம்பி ஆ.ராசா மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் பாஜக புகார்

திமுக எம்பி ஆ.ராசா மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் பாஜக புகார்

ஆ.ராசா

ஆ.ராசா

90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என்றும் ஆ.ராசா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆ.ராசா மீது பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

     அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராசா, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திமுக எம்.பி., மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சித்திருந்தார்.

    இந்த விவகாசரம் சர்ச்சையான நிலையில், ஆ.ராசா தனது சமூகவலைதளப் பக்கத்தில், சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார். மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது என்றும் வினவியுள்ளார். அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும் 90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் அளித்துள்ளார்.

     
    Published by:Arunkumar A
    First published:

    Tags: A Raja, BJP, DMK

    அடுத்த செய்தி