Home /News /tamil-nadu /

நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுங்கள்! ஆளுநரிடம் புகார் அளித்த பா.ஜ.க

நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுங்கள்! ஆளுநரிடம் புகார் அளித்த பா.ஜ.க

நெல்லை கண்ணன்

நெல்லை கண்ணன்

  • News18
  • Last Updated :
நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநரிடம் தமிழக பா.ஜ.க சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ‘பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெல்லை கண்ணன் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ‘தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து நெல்லைக் கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் நரேந்திரன், ‘நெல்லை கண்ணனின் பேச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் இரு சமூகத்தினர் மத்தியில் மோதலை உண்டாக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. முஸ்லீம் சமூகத்தினரை பிரதமருக்கு எதிராகவும், உள்துறை அமைச்சருக்கு எதிராகவும் தூண்டி விடக் கூடிய வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கைவைத்தோம்’ என்று தெரிவித்தார்.
முன்னதாக நெல்லை கண்ணனின் பேச்சு பா.ஜ.க தேசியச்செயலாளர் ஹெச்.ராஜாவும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை கொலை செய்யத் (சோலிய முடிப்பீங்க) தூண்டிய நெல்லைக் கண்ணன் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை.

கல்யாணராமனின் முகநூல் பதிவிற்கு கைது செய்து ரிமாண்ட் செய்த காவல்துறை பிரதமர், உள்துறை அமைச்சர் விஷயத்தில் வெறும் வழக்குப்பதிவு நாடகமா? நெல்லை கண்ணன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி. கண்ணன் பேசியுள்ளது அவதூறு பேச்சல்ல. கொலைக்கு தூண்டுதல் (சோலிய முடி). ராஜிவ்காந்தி படுகொலை போன்ற சம்பவத்தை மீண்டும் தமிழகத்தில் நடத்த திட்டமிடுவதாகவே தெரிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:


 
Published by:Karthick S
First published:

Tags: BJP

அடுத்த செய்தி