தமிழகம் முழுவதும் பா.ஜ.க, குரல் ஒலிக்கும் நாள் வரப்போவது உறுதி: ஜே.பி.நட்டா

தமிழகம் முழுவதும் பா.ஜ.க, குரல் ஒலிக்கும் நாள் வரப்போவது உறுதி: ஜே.பி.நட்டா

நட்டா

ஆன்மீக பூமியான தமிழகத்தில் நின்று பேசுவதையே பெருமையாக கருதுவதாக நட்டா தெரிவித்தார்.

 • Share this:
  தமிழகம் முழுவதும் பா.ஜ.க, குரல் ஒலிக்கும் நாள் வரப்போவது உறுதி என பொங்கல் விழாவில் பங்கேற்ற பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  இதனைத் தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் பாஜகவினர் சார்பில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் விழாவில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து ஜே.பி.நட்டா கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருடன் பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தார். அதன்பின்னர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என ஜே.பி.நட்டா தமிழில் தனது உரையை தொடங்கினார்.

  ஆன்மீக பூமியான தமிழகத்தில் நின்று பேசுவதையே பெருமையாக கருதுவதாக அவர் தெரிவித்தார். உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்று புகழாரம் பேசினார். கலாச்சாரத்தில் தமிழகத்தை முன்னோடியாக்க பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.

  தமிழ்நாட்டில் பா.ஜ.கவிற்கு அமோக வரவேற்பு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என கூறிய அவர், பா.ஜ.க, பா.ஜ.க என ஒலிக்கும் நாள் வரப்போவதாக தெரிவித்தார்.
  Published by:Yuvaraj V
  First published: