ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது - அமைச்சர் சேகர்பாபு

பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது - அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

பாஜக ஒரு சைத்தான். இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கு இடமில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக்கூடிய சக்தி படைத்தவர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஐபி தரிசனம், கட்டண தரிசனத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சீராய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கோயில்களுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 739 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கோயில்களில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற நிலையை களையும் வகையில் வி.ஐ.பி தரிசனத்தை முழுமையாக தடை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  Also Read :  பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க சூர்யா சிவாவுக்கு தடை - அண்ணாமலை உத்தரவு

  தொடர்ந்து பேசிய அவர், தரிசன கட்டணம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது அல்ல எனவும், பெரிய கோயில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், கட்டண தரிசனத்தை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

  மேலும் பாஜக தமிழகத்தில் பிசாசு மாதிரி வளர்ந்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்த கேள்விக்கு, பாஜக ஒரு சைத்தான். இந்த ஆட்சியில் சைத்தான்களுக்கு இடமில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக்கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக காலூன்ற முடியாது என பதிலளித்தார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: BJP, CM MK Stalin, DMK, Minister Sekar Babu, Tamil Nadu