அரசியல் வரலாற்றில் காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக கட்சிகள்தான் தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன. பாஜக தேசிய அளவில் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், தமிழகம் உள்ளட்ட தென்னிந்தியாவில் கால்பதிக்க கடுமையாக போராடி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவிற்கு 2 முதல் 3 சதவீத வாக்குகள் மட்டுமே இருக்கின்றன.
1996ஆம் ஆண்டு பாஜக சார்பில் வேலாயுதம், கன்னியாக்குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ வாக தேர்வானார். அந்த தேர்தலில் அவர் 1.8 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.
அதன் பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக தனித்து போட்டியிட்டது. பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பாஜகவை தேர்தல் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாஜக களம் கண்டது.
பிரதமர் நரேந்திர மோடி, மதிய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் என பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் பாஜகவின் 3 வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளனர்.
Must Read : அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: பிரம்மாண்ட கூட்டணி போட்டும் காங்கிரஸ் தோல்வி!
இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் கோவை தெற்கு தொகுதியில் நீண்ட நேர இழுபறிக்குப் பிறகு பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன், நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தி, திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பாஜக தமிழக சட்டமன்றத்தில் இடம்பிடித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, TN Assembly, TN Assembly Election 2021, Vanathi srinivasan