ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வன்முறையை தூண்டும் தி.மு.கவினரை கைது செய்யுங்கள் - குஷ்பு, பா.ஜ.க நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் புகார்

வன்முறையை தூண்டும் தி.மு.கவினரை கைது செய்யுங்கள் - குஷ்பு, பா.ஜ.க நிர்வாகிகள் காவல் ஆணையரிடம் புகார்

குஷ்பு

குஷ்பு

தமிழர்களுக்கு தமிழ் மண் மீது உரிமை இருப்பது போல எனக்கு உரிமை இருக்கிறது" என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நடிகை குஷ்பு தலைமையில் தமிழக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பா.ஜ.க வழக்கறிஞர் அணி தலைவர் பால்கனகராஜ், கராத்தே தியாகராஜன் முன்னிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

  இதுகுறித்து பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியில் தேசிய வாக்காளர் பேரவையினர் 5 பேர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று துண்டு பிரசுரம் விநியோகித்து வந்தனர். அப்போது தி.மு.கவினர் வந்து தேசிய வாக்காளர் பேரவையினர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

  கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தி.மு.கவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.கவினரை காவல்துறையினர் ஏன் கைது செய்யவில்லை. வன்முறையை தி.மு.கவினர் தூண்டி வருகின்றனர். பொதுமக்கள் இதனால் பயத்தில் உள்ளனர்.

  துறைமுகம் தொகுதியில் தி.மு.கவினர் வேண்டுமென்றே பிரச்சனையை கிளப்பிவிட்டுள்ளனர். சேகர்பாபு வன்முறையை கையாளுகிறார். சட்டத்தை மீறுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று கரு நாகராஜன் கூறியுள்ளார்.

  நடிகை குஷ்பு செய்தியாளர்ளிடம் கூறுகையில், "எனக்கு தமிழ் மண் மீது உரிமையில்லை என்று யாரும் கூறமுடியாது. 35 ஆண்டுகளாக நான் தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். குடும்பத்தோடு இருக்கிறேன். தமிழர்களுக்கு தமிழ் மண் மீது உரிமை இருப்பது போல எனக்கு உரிமை இருக்கிறது" என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: BJP, DMK, Kushboo, Thousand Lights Constituency, TN Assembly Election 2021