பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு

பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு

அண்ணாமலை

பா.ஜ.கவின் துணைத் தலைவரும் வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

    சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல, தமிழ், மலையாளம், தெலுகு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் நிவேதா தாமஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடிகர் மாதவன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தி.மு.க எம்.பி கனிமொழி, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் கொரோனா பாதிக்கப்பட்டனர். குஷ்புவின் கணவரும், திரைப்பட இயக்குநருமான சுந்தர் சி-க்கும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல, தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவரும், அரவக்குறிச்சி தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலைக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சோதனை செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: