அரவக்குறிச்சி தொகுதியில் 100 புதிய குளங்கள் வெட்டப்பட்டு நீர் நிரப்பப்படும்: பாஜக வேட்பாளர் அண்ணாமலை
அரவக்குறிச்சி தொகுதியில் 100 புதிய குளங்கள் வெட்டப்பட்டு நீர் நிரப்பப்படும்: பாஜக வேட்பாளர் அண்ணாமலை
அரவக்குறிச்சி தொகுதியில் 100 புதிய குளங்கள் வெட்டப்பட்டு நீர் நிரப்பப்படும் என இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வாக்கு சேகரித்தார்.
அரவக்குறிச்சி தொகுதியில் 100 புதிய குளங்கள் வெட்டப்பட்டு நீர் நிரப்பப்படும் என இறுதிகட்ட பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வாக்கு சேகரித்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இறுதிக் கட்ட பரப்புரையை இன்று காலை தொடங்கினார். அவரது தொகுதிக்குட்பட்ட தளவாபாளையத்தில் பரப்புரையை தொடங்கியவர் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அரவக்குறிச்சி தொகுதிக்கான தனி செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
அதில், அரவக்குறிச்சி தொகுதியில் புதிதாக 100 குளங்கள் வெட்டி தண்ணீர் நிரப்பப்படும், 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு, வீடு இல்லா குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, முருங்கை வாரியம் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை அப்பகுதி பொதுமக்களிடம் கொடுத்து வெளியிட வைத்தார்.
தொடர்ந்து அண்ணாமலை வாக்கு கேட்டு பேசுகையில்,
”தொகுதியில் 6 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு மக்கள். பிரச்னைகள் தீர்க்கப்படும்.
நீங்கள் அளிக்கும் வாக்கு நல்லவருக்கான வாக்கு, நேர்மைக்கான வாக்கு. உடலில் உயிர் இருக்கும் வரை அரவக்குறிச்சி தொகுதி மக்களுடனான உறவு இருக்கும். பெண்கள் முகத்தில் இன்றே தாமரை மலர்ந்து விட்டது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப் பதிவு இயந்திரத்தில் தாமரை மலர வேண்டும்.” என பேசினார்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.