ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் பிரச்சனையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி பாஜக பிரமுகர்கள் இருவர் கைது.

ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் பிரச்சனையில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி பாஜக பிரமுகர்கள் இருவர் கைது.

புருஷோத்தமன், பாஜக

புருஷோத்தமன், பாஜக

ஒரு வாரத்திற்கு முன்பாக பாஸ்கரனும் புருஷோத்தமனும் இதே எம்.எஸ்.எம் மலேசியன் பரோட்டா கடைக்கு வந்து ரூ.850-க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் ஏமாற்றி சென்றதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஐஸ்ஹவுஸ் முத்தையா தெருவில் MSM மலேசியன் பரோட்டா என்ற துரித உணவகத்தை சேபு அபு பக்கர் என்பவர் நடத்தி வருகின்றார். இந்த கடைக்கு கடந்த 11-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்குவதற்காக மூன்று பேர் வந்துள்ளனர். சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்கி விட்டு கடைக்காரர் அதற்கான பணத்தை கேட்டபோது வந்திருந்த மூவரும் கடை ஊழியர்களிடம், எங்களிடமே பணம் கேட்கிறாயா? நாங்கள் மூவருமே பாஜக கட்சி பிரமுகர்கள் என கூறி பிரச்சினையில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் மூவர் பிரச்சனை செய்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மதுபோதையில் இருக்கும் நபர், "தான் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்றும், கலவரம் ஆகிவிடும் என்றும், பிஜேபி ஆள் என மரியாதை இல்லையா? அமித்ஷா பிஏவுக்கு போன் செய்வேன் என்றும் அவர் வீடியோவில் பேசியிருப்பார். இதனையடுத்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில் ஃப்ரைட் ரைஸ் கேட்டு பிரச்சனையில் ஈடுப்பட்டது பா.ஜ.க. பிரமுகர்கள் என்பது தெரிய வந்தது.

மதுபோதையில் பிரச்சனையில் ஈடுபட்டது BJP திருவல்லிக்கேணி மேற்கு தொகுதி செயலாளர் பாஸ்கர், BJP திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் புருஷோத்தமன் மற்றும் BJP கட்சியை சேர்ந்த சூர்யா என்பது தெரியவந்தது.

பாஸ்கர்

புருஷோத்தமன்

இதனையடுத்து திருவல்லிக்கேணி மேற்கு தொகுதி செயலாளர் பாஸ்கர் மற்றும் பகுதி செயலாளர் புருஷோத்தமன் ஆகிய இருவரை ஐஸ் ஹவுஸ் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2019-இல் இல் இலங்கை தூதரகத்தை தாக்கிய வழக்கு, விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும் இவர்கள் திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் பகுதிகளில் உணவகங்களில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் பிரச்சனையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்கள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், தனி நபரை தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஸ்கரன் மற்றும் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாஜக கட்சியை சேர்ந்த சூர்யா என்பவரை தேடி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பாக பாஸ்கரனும் புருஷோத்தமனும் இதே எம்.எஸ்.எம் மலேசியன் பரோட்டா கடைக்கு வந்து ரூ.850-க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் ஏமாற்றி சென்றதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by:Gunavathy
First published:

Tags: BJP, BJP cadre, Bjp party men, Chennai, Chicken Recipes, Parotta, Triplicane